காதலிக்க ஆரம்பிக்கும் போது இருக்கும் சுவாரசியம் போக போக குறைந்து விடும், பல காதல்கள் திருமணம் வரை கூட போவதில்லை, பல நேரங்களில் இந்த காதல் முறிவுகளுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் அல்ல, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் இதில் பங்கு உண்டு, இது தான் இப்படி என்றால் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்பவர்களிடம் கூட ஆரம்பத்தில் இருக்கும் அன்பும் கவர்ச்சியும் போய் எந்நேரமும் சண்டை போட்டு கடைசியில் விவாகரத்தில் முடிந்துவிடும்.
உங்கள் காதலியோ அல்லது மனைவியோ உங்களுடனான உறவை தொடர விரும்பவில்லை என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
உங்களுக்கு இடையில் பேச்சு குறைகிறதா?
காதலியுடனோ மனைவியுடனோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த நாட்கள் போய் பேசுவதற்கு முன் பேசலாமா என்று யோசிக்கின்றீர்களா? உங்களுடன் பேசுவதை காதலியோ மனைவியோ தவிர்க்கிறார்களா? உங்கள் உறவு டேஞ்சரில் இருக்கின்றது என்று அர்த்தம்.
உடலுறவை தவிர்க்கிறாரா?
எப்போதாவது உடல்நிலை சரியில்லை, அசதி என்று காரணம் சொல்லி மனைவி உடலுறவை தவிர்க்கலாம், ஆனால் அடிக்கடி ஏதேனும் காரணம் சொல்லி உடலுறவை தவிர்க்கிறாரா? அப்படியெனில் நிச்சயம் உங்கள் உறவு டேஞ்சராக உள்ளது என்று பொருள், காதலியுடன் அவ்வப்போது நடைபெறும் உரசல்கள், முத்தங்களை தவிர்க்கிறாரா? கொஞ்சம் கவனமாக இருங்கள்
காரணமே இல்லாமல் சண்டையா?
காரணமே இல்லாமல் சண்டை போட்டாலும் உங்களை விமர்சித்தாலும் உங்களுடனான உறவை காதலியோ மனைவியோ விரும்பவில்லை என்று அர்த்தம். நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாரா? சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.
உங்களுக்கு வேண்டியவரை உங்கள் காதலி/மனைவி சந்திக்க விரும்புவதில்லையா?
நீங்கள் மிகவும் மதிப்பவரை, நீங்கள் மிகவும் விரும்புபவரை உங்கள் காதலி திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும்.
ரொமான்ஸ்சை விரும்புவதில்லையா?
சாதாரணமாக இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது போன்றவைகளை விலக்கி ஒதுங்கினால், இந்த உறவு உங்கள் காதலிக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனை முற்றியுள்ளதின் அறிகுறியாகும்.
இருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லையா?
வீக் எண்டை எப்படி செலவு செய்வது, எப்படி வீடு கட்டுவது, வருங்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே பேசவில்லையா, காதலியாக இருந்தால் கல்யாணம், குழந்தைகள் பெற்றுகொள்வது பற்றி பேசவில்லையா உஷாரைய்யா உஷாரு.
தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லையா?
உங்களுடன் வெளியில் வரும்போது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிக்கும் பெண் திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது சிரத்தையின்றி அழகு படுத்திக்கொண்டில்லாமல் ஒரு வித அலட்சியத்துடன் நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும் அவர் உங்களை விரும்பவில்லை என்று.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.