சென்னை ராயப்பேட்டை உசேன்நகரை சேர்ந்தவர் நாசர், இவரது மகன் அக்பர் (வயது 32). தமிழ்மாநில முஸ்லிம்லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருகிறார், புனித ரமலான் மாதம் என்பதால் என்பதால் அக்பர் நோன்பு இருந்து வந்தார்.
இன்று காலை 4 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.
இதையடுத்து இந்த கொலை இந்து முன்னணியினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்று போலிசார் விசாரணை மேற்கொண்டனர், ஆனால் அரசியல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்மாநில முஸ்லிம்லீக் கட்சியில் இருந்து ஒரு பிரிவினர் சில காலங்களுக்கு முன் விலகியுள்ளனர், பிரிந்து சென்ற கோஷ்டிக்கும் அக்பருக்கும் இடையே ஏற்கனவே சிறு சிறு மோதல்கள் இருந்து வந்துள்ளது. இந்த மோதல் குறித்து அக்பர் ஐஸ் அவுஸ் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். இந்த கும்பலே காத்திருந்து அக்பரை கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர். அக்பரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கொலையாளிகளை கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டனர், போலிசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.