கடலூர் அருகே உள்ள பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் உஸ்மான் அலி, இவரது மகன் ஹாஜா ஃபக்ரூதின்(37). ஹாஜா ஃபக்ரூதின் ஒரு நாள் அவரது தந்தை உஸ்மான் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கனவு நனவாகியுள்ளதாகவும் தான் தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சிரியாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் தான் ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்து பஷீர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக சண்டை போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,
மேலும் இந்தியாவிலிருந்து 80க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் இதில் இணைந்துள்ளதாகவும் ஹாஜா ஃபக்ரூதின் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். தானும் தன் மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் ஹாஜா ஃபக்ரூதின் சிரியா செல்வதை தடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் ஏற்கனவே மனதளவில் அதற்கு தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஹாஜா ஃபக்ரூதின் சம்பளத்தில் பெரும் பகுதியை ஐஎஸ்ஐஎஸ் படைக்கு செலவிட்டதாகவும் குறிப்பிட்டார். மகனின் சம்பளத்தை நம்பி குடும்பத்தை நடத்திய தான் தற்போது வறுமையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் தாங்கள் பலமுறை இப்படி செய்யக்கூடாது என்று குறிப்பிட்டும் தனது மகன் இப்படி போய் ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்தது வீட்டிற்கு அடங்காத செயல் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.