BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 October 2013

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை தெரிவித்த வேதனை, தியாகுவின் "பெண்" லீலைகள் காரணமா?

பாடலாசிரியர் தாமரை நேர்மையான தமிழ் ஆர்வலர், தன் வாழ்வை தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் அற்பனித்து கொண்டவர், தமிழ் உணர்வின் காரணமாகவே நக்சல் போராட்டங்களில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின் சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் போராளியாக இருந்த தியாகுவை திருமணம் செய்து கொண்டார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று சமீபத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கடைசியில் கருணாநிதிக்கு மன்மோகன் சிங் லெட்டர் போட்டதில் முடித்துக்கொண்டார், ஆனால் அவரது உண்ணாவிரத போராட்டத்தை தமிழ் உணர்வாளர்களே சீரியஸாக எடுக்கவில்லை, இதெல்லாம் அவர் குடும்பத்திலும் அவரது தோழர்கள் மத்தியிலும் "பெண்" தொடர்பான‌ பிரச்சினைகளால் சரிந்து போன தனது இமேஜை நிலை நிறுத்த செய்த முயற்சியாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கீழ்கண்டவாறு எழுதி தனது வேதனையை கவிஞர் தாமரை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்

------------
" என் மொழிப் பற்றும் இனப் பற்றும்தான் என் இன்றைய
அவல நிலைமைக்குக் காரணமோ என்று எண்ண வைத்து விட்டது....

எந்த சமூகத்திற்காக உழைத்தேனோ அந்த சமூகத்தின் முன் நியாயம் கேட்டு வர வேண்டி நேரிடுமோ என்று அஞ்சுகிறேன்..

இது என் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை அன்று....
பொதுவாழ்க்கையில் நேர்மை, தூய்மை, ஒழுக்கம், அறம் வேண்டி நிற்கிறேன்....."
----------
தியாகு அவர்கள் நக்சல் போராட்டத்தில் பங்கெடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின் சிறையிலிருந்து விடுதலை ஆனவர். கம்பிக்குள் வெளிச்சங்கள் என்ற தொடரை ஜூனியர் விகடனில் எழுதி சிறைக்குள் நடக்கும் பல மோசமான மனித உரிமை மீறல்களை வெளியில் கொண்டுவந்தவர்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உண்டு, பின் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளில் அவர்களுடன் சேர்ந்து வாழவில்லை,  பின் கவிஞர் பாடலாசிரியர் தாமரை அவர்களுடன் இணைந்து வாழ்கிறார்கள், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தியாகுவின் இயக்கத்தில் உள்ள பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பிரச்சினை கிளம்பியது. கவிஞர் தாமரைக்கும் தியாகுவுக்கும் இடையில் இது குறித்து சமரசங்களை சிலர் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த பெண் மற்றும் அது குறித்த பஞ்சாயத்து தான் இந்த வீடியோ தொகுப்பில் உள்ளது.

தியாகு இந்த பெண்ணிற்கு ஐ லவ் யூ சொன்னதாகவும், வேலையை விட்டுவிடு மெயின்டனென்ஸ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசியதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தோழர் தியாகு தரப்பு இது குறித்து என்ன சொல்லப்போகிறது? சமூகத்துக்காக சிறையில் வாடியவர், சமூக விடுதலை தொடர்பாக நிரம்ப அறிவு உள்ளவர் பெண்கள் விசயத்தில் ஏன் வீக்னஸ் ஆக இருக்கிறார்? இன்றைக்கு சமூகத்திலும் டிவிகளிலும் சமூக சிந்தனைகள், முற்போக்கு சிந்தனைகள், பெண்ணியம் தொடர்பாக பேசும் சிலர் இரண்டு மனைவிகளுடன் வெளிப்படையாக வாழ்கிறார்கள், சிலர் திருமணத்தை தாண்டிய தொடர்புகளுடன் உள்ளார்கள், ஏன் இந்த வேடம்?

தமிழ்தேசியத்தை முன்னெடுக்க போராடுவதாக கூறும் தோழர்களோ கள்ள காதல் பிரச்சினையில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தால் தமிழ் தேசியத்திற்காக எப்போது போராடுவார்கள்?


http://www.youtube.com/watch?v=1yv7N44QmL4

http://www.youtube.com/watch?v=aSkbUOzj_eM

http://www.youtube.com/watch?v=tAg-M64vye8

http://www.youtube.com/watch?v=CnvLtMX8nSE

http://www.youtube.com/watch?v=YjT-0l9wD7I


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media