முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் விநாயகர் நினைவு வருகிறதோ இல்லையோ கரகாட்டக்காரன் ஹீரோ ராமராஜன் தான் நினைவுக்கு வருவார்.
மிகப்பெரிய ஹீரோவாக இருந்து பணம் புகழை எல்லாம் இழந்து இருந்த ராமராஜன் சிறிது காலம் அதிமுக சார்பில் எம்பி ஆக இருந்தார், பின் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கார் விபத்தில் அடிபட்டு பலத்த காயமடைந்தார், விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்த போது கிறித்துவ பாதிரியார் ஒருவர் கொடுத்த பைபிளை படித்த பின் வேகமாக குணமடைந்ததாக குறிப்பிட்ட ராமராஜன் தற்போது தன் பெயரை "ஆண்டனி பிச்சை" என்று மாற்றிக்கொண்டு கிறித்துவராக மதம் மாறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இன்று இதுகுறித்து பேசிய ராமராஜன் தான் மதம் மாறவில்லை என்றும் தான் விபத்தில் அடிபட்ட போது கிறித்துவ நண்பர்கள் ஜெபித்ததால் அவரகளுக்காக கிறித்துவ விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார், ஆனால் ராமராஜன் மதம் மாறிவிட்டதாகவும் அதிமுக தலைமைக்கு இது தெரிந்தால் பிடிக்காது என்பதால் மறைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
# கஷ்டத்தில் இருப்பவர்களிடம் எதையாவது சொல்லி மதம் மாற்றுவது தவறு என்பவர்கள் லைக் போடவும்
# கஷ்டத்தில் இருப்பவர்களை ஆறுதலாக பேசி அவர்கள் விருப்பப்பட்டால் மதம் மாற்றுவதில் என்ன தவறு? என்று நினைப்பவர்கள் தங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லவும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.