விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தான் திமுகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். தே.மு.தி.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான் என்று திமுக தலைவர் கருணாநிதி விஜயகாந்த் கூட்டணிக்கு சிக்னல் காட்டியிருந்த போதும் விஜயகாந்த் மனைவி திமுகவை விமர்சித்தார்.
ஒரு 'இத்துபோன'(வடிவேலு) நடிகரை வைத்து கொண்டு, தி.மு.க, விஜயகாந்தை மிக மோசமாக, கொச்சையாக பேசியதாகவும், அப்படி பேசியதை தங்களது தொலைகாட்சியில் ஒளிபரப்பி மகிழ்ந்ததாகவும் பிரேமலதா குற்றம் சாட்டினார், மேலும், தி.மு.க தனது ஆட்சி காலத்தில், விஜயகாந்தின் மண்டபத்தை இடித்தது, வருமான வரி சோதனை நடத்தியது போன்று தே.மு.தி.க விற்கு பல நெருக்கடிகள் கொடுத்ததாகவும் நேற்று பேசினார்
விஜயகாந்த்தும் நேற்று கருணாநிதியின் சிக்னலை கண்டுகொள்ளாமல் திமுக பற்றி பேசவே இல்லை.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி, தி.மு.க லோக்சபா தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாமல் போகும் என்றும், விஜயகாந்த்தை ஒரு அரசியல் தலைவராகவே தான் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார்.
இந்நிலையில் இன்று மு.க.அழகிரி பேட்டியை அவரது தந்தை கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று இது குறித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி "தே.மு.தி.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான்"" என்று "கழகத்தின் தலைவர்" என்ற முறையில் நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க. அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத் தக்கதுமாகும் என்று கூறியுள்ளார்.
அழகிரியின் எதிர்ப்பையும் மீறி, பிரேமலதா கடுமையாக திமுகவை விமர்சித்த போதும் கொஞ்சம் கூட இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க திமுக தலைவர் கருணாநிதி முனைவது அவமானமாக உள்ளது என திமுக தொண்டர்களே மனம் வருந்துகின்றனர்.
# சந்த்ரு சந்த்ருன்னு இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே, அவனை தேடுறேன்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.