அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகருக்கு 23-சி மாநகரப் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்து, அண்ணா மேம்பாலம் அருகே வந்த போது, அப்போது அங் கிருந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பஸ்ஸை மறித்து, பயணிகளை கீழே இறக்கிவிட்ட னர். பின்னர் மாலைகள் மற்றும் பெயர் பலகைகளுடன் 'பஸ் டே' கொண்டாட அனைவரும் பேருந்தில் ஏறினர். பேருந்துக்கு முன்பு மாலைகளை கட்டினர்.
அப்பொழுது அங்கு வந்த போலீசார், பஸ் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், கலைந்து செல்லுங்கள் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தனர். மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது, அது முற்றிய நிலையில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையொட்டி, அண்ணா சாலையில் மாணவர்கள் திடீரென்று கீழே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போலீஸ் உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அண்ணாசாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை சரியென நினைத்தால், 'லைக்' செய்யுங்கள். இல்லையென, நினைத்தால் உங்கள் கருத்தை 'கமென்ட்' செய்யுங்கள்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.