ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சாகப்போகிறார் என்று அழகிரி கருணாநிதியிடம் கூறியதாகவும் தகாத வார்த்தைகளால் வெறுப்புடன் பேசியதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தன் மகன் மீது குற்றம் சுமத்தி இன்று மாலை சென்னையில் பேட்டி அளித்தார்.
உடனடியாக மதுரையில் இது குறித்து பேட்டி அளித்த அழகிரி தலைவரின் பேட்டி கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என்மீது இப்படிபட்ட ஒரு அபாண்டத்தை சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால், அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்
என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ", என்று அழகிரி கூறியுள்ளார்.
உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.
என்னை பற்றி திமுக தொண்டர்கள் நன்றாக அறிவார்கள். என்றைக்கும் நான் தொண்டர்கள் பக்கம் தான் இருப்பேன், தலைவர் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும். இவர் சாவதற்கு முன்னாடி நாங்கள் சாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாங்கள். ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவரது கண்ணீர் எங்களின் பிணத்தின் மீது விழணும் என்று இந்த பேட்டியை முடிக்கிறேன் என்றார்.
# இதுவரை குடும்ப அரசியல் செய்தவர்கள், இப்போது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் செய்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.