சென்னையில் தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் அ.தி.மு.க. பிரமுகர்களான ஆறுமுகம் (தேனாம்பேட்டை), மோசஸ் (ராயப்பேட்டை) ஆகியோர் மற்றும் திருவான்மியூரில் தி.மு.க. பிரமுகரான கந்தனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் நடந்துள்ள இப்படுகொலை சம்பவங்களால் போலீசார் கூடுதல் விழிப்புடன் செயல்பட தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தனிப்படை போலீசாருக்கும் 3 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னையில் தறைமறைவாக இருக்கும் ரவுடிகளை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும், இல்லையென்றால் சரண் அடைய செய்ய வேண்டும், இந்த இரண்டும் நடக்க இயலாத நிலையில், சம்பந்தப்பட்ட ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. சுமார் 100 ரவுடிகளை சென்னையை விட்டு வெளியேற்ற போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.