பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரி பர்காஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகனும் துணை முதல் மந்திரியுமான சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் பொறுப்பேற்ற 21 மாத காலத்தில் தங்களது வாகனங்களுக்கு மற்றும் பாதுகாப்பு வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப மட்டும் சுமார் 14 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
32 பாதுகாப்பு வாகனங்களோடு பயணிக்கும் பர்காஷ் சிங் பாதலின் வாகன பரிவாரத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் செலவினங்கள் மட்டும் 8.22 கோடி ரூபாய் என்றும் அவரது மகன் சுக்பிர் சிங்குக்கு பாதுகாப்பாக செல்லும் 19 வாகனங்கள் கொண்ட பரிவாரத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் செலவினங்கள் 5.9 கோடி ரூபாய் என்றும் ஒரு சமூக ஆர்வலரின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மற்றும் இவர்கள் இருவரின் வாகனங்கள் குறிப்பிட்ட பாதை வழியாக செல்லும் போது அப்பகுதியை சோதனையிடுவதற்காக அனுப்பப்படும் குண்டுகளை செயலிழக்க வைக்கும் வாகனத்துக்கான எரிபொருள் செலவான 4.48 கோடி ரூபாய் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கின்ற போது, மந்திரிகளின் இந்த போக்கு கடும் அதிருப்தியை உருவாக்கும் வகையில் உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.