சவுதி அரேபியாவில் 90 வயது நிரம்பிய முதியவருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அருகாமையில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், முதியவருக்கு இதய துடிப்பு நின்று விட்டதால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறினார்.
எனினும், அந்த முதியவரை அவரது உறவினர்கள், நம்பிக்கையை இழக்காமல் அவரை ஒரு காரில் போட்டுக் கொண்டு 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள் நின்றுப் போன முதியவரின் இதயத்தை மின்சார அதிர்ச்சியின் மூலம் மீண்டும் இயங்க வைக்க முயற்சித்தனர். தொடர்ந்து சில முறை மிதமான மின்சாரத்தை அவரது மார்புப் பகுதியில் செலுத்தியதில் இயக்கத்தை இழந்த இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
இவ்வாறு, இறந்து போனதாக கூறப்பட்ட 90 வயது முதியவர், மறுபடியும் உயிர் பெற்றதாக, அரபு நாட்டில் செய்திகள் வெளியாகி இருந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.