பெல்ஜியன் நாட்டில் 'டீ மார்கன்' என்ற செய்தித்தாள், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவையும், மிஷெல் ஒபாமாவையும், மனித குரங்குகள் போன்று சித்தரிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.
இந்த புகைப்படம் ஒபாமா மற்றும் மிஷெல் ஒபாமவை அவமதிக்கும் வகையில் இருப்பதால், சமூக வலைதளங்களில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு, மக்கள் இதைப் பற்றி விவாதிக்க தொடங்கினர். கண்டனத்திற்குரிய அந்த புகைப்படத்தை செய்தித்தாளில் வெளியிட, ஒப்புதல் அளித்த பத்திரிக்கை ஆசிரியர் யார் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். இந்நிலையில், தான் செய்த தவறை உணர்ந்து, டீ மார்கன் செய்தித்தாள், மன்னிப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அச்செய்தியில், நகைச்சுவைக்காக மட்டுமே அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டதாகவும், இனவெறி தாக்குதல் என்ற எண்ணத்தில் இல்லை, ஆனால், அனைவரும் அதை வெறும் நகைச்சுவையாக எடுத்து கொள்வார்கள் என தாங்கள் நம்பியது தவறு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.