முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு குற்றவாளிகளையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு, அரசமைப்புச் சட்டம் பிரிவு 14, 21-ன் படி தவறானதாகும்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-ல் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, ஒப்புதல் பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.