காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பாத நிலையில், இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போதைய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரான மணிஷ் திவாரி, நிதியமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிட மறுப்பதாக கூறப்படுகிறது. இவர்களை ராகுல் காந்தி போட்டியிட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
எனினும் சிதம்பரம் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை சிவகங்கையில் போட்டியிட வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. சிதம்பரம், தன்னை ராஜ்யசபா தேர்தலில் எம்.பியாக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. சச்சின் பைலட் அவரது சீட்டை கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அசாருதீனுக்கு வழங்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பவன்குமார் பன்சால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தெரிகிறது. அவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.