நீலகிரி தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட பாஜக வேட்பாளர் குருமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி, ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு, நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிடும் வாய்ப்பை இழந்தது. இதுபற்றி முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன், மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) எஸ்.மோகன்ராஜுலு, மாநில செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து அறிக்கை அளித்துள்ளது.
அதன்படி குருமூர்த்தியும், அவரது தலைமை முகவராக செயல்பட்டு உரிய நேரத்தில் ஆவணங்களைக் கொடுக்கத் தவறிய வரதராஜனும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படு கிறார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்டு விசாரித்து இறுதி அறிக்கையை மாநிலத் தலைமைக்கு வழங்கும். அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.