தென்னக ரெயில்வே துறையின் சார்பில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த முதல் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலியான ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சுவாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, ‘இனி வரும் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் வேலை தினத்தை தென்னக ரெயில்வே சுவாதி தினமாக அனுசரிக்கும். அந்நாளன்று, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த, எப்போதும் தயார்நிலையில் இருக்கும்படி எங்களை மறு அர்ப்பணம் செய்து உறுதிமொழி ஏற்போம். பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை பயணிகளுக்கும் எடுத்துரைப்போம்’ என்று தெரிவித்தார்.
மேலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்குமோ..? என்று பயப்படாமல் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக உதவி செய்து, பல உயிர்களை காப்பாற்ற உதவிய ரெயில்வே ஊழியர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.