ஜூன் 14-15 பொலிவியா நாட்டில் ஜி 77 மாநாடு நடைபெறுகிறது .இந்த மாநாட்டிற்கு ஐ.நா.வின் தலைவர் பான் கீ மூன் ,இலங்கை அதிபர் ராஜபக்சே போன்ற தலைவர்கள் வருகிறார்கள் . இதில் ராஜபக்சே ஜூன் 15 அன்று உரையாற்றுகிறார் .பல நாட்டு தலைவர்களுடன் இவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் .இந்த ஜி -77 மாநாடு 1964 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது .இந்த மாநாட்டில் இலங்கையில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலை நாட்டியத்திற்காக அந்த நாடு அதிபர் ராஜபக்சேவிற்கு அமைதிக்கான விருது கொடுக்க இருக்கிறார்கள் .இந்த விருதை பொலிவியா நாட்டு அதிபர் எவோ மோர்லஸ் தர இருக்கிறார் .
இதனை கேட்கும் போது தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ரெத்தம் கொதிக்கும் .அமைதியை குலைத்தவனுக்கு அமைதிக்கான விருதா .இவனுக்கு இந்த விருது என்றால் பிறகு ஹிட்லருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் .குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டியவனுக்கு இந்த விருது என்றால் பிறகு மற்ற நாடுகளிடியே தியாகி ஆகி விடுவான் .இதனை தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை . தமிழக அரசு விரைந்து செயல் பட்டு இந்த விருதை தடுக்க வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.