உத்தர பிரதேசத்தில், ரிதேஷ் என்ற 5 வயது சிறுவன், வயலில் சிறுநீர் கழித்ததாகவும், அதை நேரில் பார்த்த வயலுக்குச் சொந்தக்காரர் சிறுவன் ரிதேஷைப் பிடித்து அடித்ததோடு அவனது உறுப்பையும் வெட்டியுள்ளார்.
ரத்தம் பீறிட அலறியபடியே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த ரிதேஷ் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே அலகாபாத் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை துர்கேஷ் மௌரியா என்பவர் மீது போலீசில் புகார் அளித்தார். மௌரியாவின் மகனும் சேர்ந்து இந்தக் கொடுமையை சிறுவனுக்குச் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பை அறுத்த மௌரியாவும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.