இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலன்பூரில் பிறந்தவர் பிரனவ் மிஸ்ட்ரி . இவர் ஒரு கணினி விஞ்ஞானி மற்றும் அறிவியல் மேதை . இவர் தற்போது சாம்சங் நிறுவனத்தின் பரிசோதனை துறையில் துணைத் தலைவராக பணிபுரிகிறார் . இவர் தனது கண்டுபிடிப்புகளான சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி கியர் ஆகியவற்றால் பிரபலமடைந்தார் .
இந்தியாவின் அறிவுஜீவி அளித்த பேட்டியில் , நான் மோடி அவர்களின் அழைப்புக்காக காத்து இருக்கிறேன் , அவர் அழைத்தால் என் கனவு வேலையை விட்டு வெளிவர தயாராக இருக்கிறேன் என்றார் . மேலும் மோடியின் புதிய தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளிக்கும் தன்மையைக் கண்டு வியந்த மிஸ்ட்ரி , நான் அவருடன் இணைந்து இன்னும் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன் . அவருக்கு எல்லா விதத்திலும் உதவ நான் தயாராக இருக்கிறேன் . நான் தனியாக ஒரு நிறுவனம் அமைத்து இருந்தால் எனக்கு மட்டும் லாபம் வந்து என்னுடைய கனவுகள் மட்டுமே நிறைவேறும் . ஆனால் நான் இந்தியாவிற்காக பணி செய்தால் அது பல பேரின் வாழ்க்கையை மாற்ற உதவியாக இருக்கும் . மற்ற அனைத்தையும் விட அதுவே எனக்கு மன நிம்மதியை கொடுக்கும் என்றார் .
மோடியும் மிஸ்ட்ரியும் 2011 ஆம் ஆண்டு சந்தித்து உள்ளார்கள் . அப்போது மோடி அவரை தனது அமைச்சரவைக்கு சிறப்பு பேட்டி அளிக்க அழைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மோடியுடன் இவர் இணைந்தால் , தொழில் தொடர்பு துறையில் புரட்சி நடத்திய ராஜிவ் காந்தி , சாம் பிட்டோர்டா போன்ற கூட்டணியைக் காணலாம் என பலர் நம்புகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.