டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு டி20 போட்டிகளில் சேஸ் செய்யப்பட்டதில் அதிக ரன்களாக இருந்தது 224 ரன்கள் ஆகும் . 2011 ஆம் ஆண்டு டைடன்ஸ் அணிக்கு எதிராக கேப் கோப்ராஸ் அணி இந்த சாதனையை படைத்து இருந்தது. இப்போது அந்த சாதனை நாட்வெஸ்ட் டி20 போட்டிகளில் முறியடிக்கப்பட்டு உள்ளது. எசக்ஸ் அணிக்கு எதிராக சசக்ஸ் அணி இந்த சாதனையை படைத்தது.
20 ஒவர்களில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த போது சசக்ஸ் அணி 9 பந்துகள் மீதம் இருக்கும் போதே ஆட்டத்தை வென்றது. அந்த அணியின் லுக் ரைட் அபாரமாக ஆடி 66 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தார். அவரது கண்க்கில் 12 பவுண்டரிகளும் 11 சிக்சர்களும் அடங்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.