மோடி அரசு பதவிக்கு வந்து இன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்தது , அதனை கொண்டாடும் விதமாக மோடி புதிய இணையதளம் ஒன்றை தொடங்கினார். அதில் மோடியின் இந்த 60 நாள் ஆட்சி பற்றிய நமது கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தை தொடங்கி வைத்து விட்டு பேசிய மோடி ,இதில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த இணையதளம் மூலம் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவேளி குறைக்கப்படும். மக்களுடனான தொடர்பு தேர்தலின் போது மட்டும் இருக்க கூடாது. அதற்கு பிறகு வரும் ஆட்சி காலத்தில் அது முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த இணையதளம் மத்திய தகவல் தொடர்பு துறையின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் தகவல் தொடர்பு துறையின் கீழ் இயங்க உள்ளது. இந்த இணையதளத்தில் மக்கள் தெரிவிக்கும் அனைத்து கருத்துகளும் அரசின் கவனத்தின் கீழ் வரும் என்றார். அந்த இணையதளத்தின் முகவரி http://mygov.nic.in/home_new
அது வெறும் இணையதளமாக மட்டும் இல்லாமல் நம்மை அரசோடு இணைக்கும தளமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.