பிரேசில் கால்பந்து வீரரான எட்வர்ட் லகர்டே, உக்ரேன் அணிக்காக கால்பந்து விளையாட உக்ரேன் நாட்டிற்கு வந்து அந்த நாட்டின் குடிமகனாக மாறினார் . இப்போது அந்த நாட்டின் ராணுவம் அவரை போரிட அழைத்துள்ளது . இதனால் இவர் உக்ரேன் குடிமகனாக மாறிய தன்னுடைய முடிவிற்கு வருத்தப்படுகிறார் .
இப்போது உள்ள உக்ரேனின் குடியரசு தலைவரான ஒலெக்ஸாண்டர் ட்ர்கினோவ் , புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவின்படி , 18 வயதுக்கு மேல் உள்ள அனைத்து உடற் தகுதி உடைய ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் இணைய வேண்டும் . இந்த உத்தரவின் மூலம் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது .
இதனால் இந்த உத்தரவினால் லகர்டேவுக்கும் ராணுவத்தில் சேர அழைப்பு வந்துள்ளது . லகர்டே உக்ரென் பெண்ணான டடன்யாவை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .
இது குறித்து அவர் தெவிக்கையில் , " நான் இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை . நான் பரபரப்பாக இருக்கிறேன் . நான் என் மனைவியை பதட்டப்படாமல் இருக்க கூறியுள்ளேன் . எல்லாம் நன்றாக நடக்கும் என அறிவுரை கூறி உள்ளேன் . நான் ராணுவத்திற்கு சென்று என்ன வேலை செய்ய போகிறேன் என்று தெரியவில்லை . எனக்கு தெரிந்த ஒரே வேலை கால்பந்து விளையாடுவது மட்டும் தான் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.