மோடி அரசு ஆட்சி வந்து ஜுலை 17 ஆம் தேதி அன்று 50 நாட்களை நிறைவு செய்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் 100 நாட்களை நிறைவு செய்ய உள்ளது. அது குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களுக்கு அவர் அறிவுரை கூறி உள்ளார். இந்த 50 நாட்களில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எடுத்து கூறுமாறு உத்தரவிட்டுள்ளார். பொறுப்பேற்ற மறுநாள் சார்க் நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். தொடர்ந்து பூடான் பயணம், பிரேசில் பயணம் என பலகட்ட வெளிநாட்டு பயணத்தை முடித்து அண்டைய நாட்டு உறவை மேம்படுத்தும் திட்டத்தில் இறங்கினார் மோடி.
அந்த வெளிநாடு பயணங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். பட்ஜெட்டில் உள்ள அனைத்து திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துரைக்க சொன்னார். 100 நாட்கள் நிறைவு செய்யும் போது அவர்கள் துறை ரீதியான நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க இப்போதே அதற்கான முயற்சியில் ஈடுபட சொன்னார். குறிப்பாக மோடியின் 17 அம்ச திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.