BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 July 2014

ஜடேஜா - ஆண்டர்சன் விவகாரம் நடந்தது என்ன ??


இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் , இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ,  ஜடேஜாவை வசைபாடிய பிறகு தொட்டு தள்ளி விட்டதாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பூகார் அளித்துள்ளது .

இரண்டாம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது , இரண்டு அணி வீரர்களும் பெவிலியன் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது , இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே சென்றனர் . தீடிரென ஆவேசம் அடைந்த ஆண்டர்சன் ஜடேஜாவை தொட்டு தள்ளிவிட்டுள்ளார் . இதுகுறித்து இந்திய அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன் தோனியிடம் கேட்டு அறிந்த பின் பூகார் அளித்ததாக இந்திய கிரிக்கெட் அணியில் மேலாளர் சுணில் தேவ் கூறினார் .

முதலில் இதனை சிறு பிரச்சனை என்று கூறி வந்த இங்கிலாந்து நிர்வாகம் , இந்திய அணி பூகார் அளித்த பின் ஜடேஜா மீது பூகார் அளிக்க பரிசீலித்து வருகிறது .

ஆனால் இங்கிலாந்து பத்திரிக்கை வட்டாரங்களோ , இங்கிலாந்தின் சீனியர் பௌளரை அணியை விட்டு வெளியேற்றுவதற்காக இவ்வாறு இந்திய அணி ஈடுபடுகிறது என்று வதந்தியைக் கிளப்பியுள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media