கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது . இதனால் மக்கள் பெரும் கவலையில் இருந்தனர் . அவர்களது கவலை தீரும் முன்னே இப்போது அடுத்த கவலை அவர்களை தாக்கியுள்ளது . மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது .
அது என்ன மானியம் இல்லாத சிலிண்டர் ??
ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கும் . அதற்கு மேல் சிலிண்டர்கள் அனைத்தும் மானியம் இல்லாத அதன் விலையிலேயே கிடைக்கும் .
இப்போது மானியம் இல்லாத சிலிண்டர் விலை 16.50 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . இதன்படி இப்போதைய சிலிண்டரின் விலை ரூ.924 . மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை கடந்த மாதம் 22 ரூபாய் குறைக்கப்பட்டது . இப்போது 16.5 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . 6 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டரின் விலை இப்போது தான் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் எரிபொருள் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.