மேற்கு வங்கத்தின் , காலியாபாசார் என்னும் கிராமத்தில் ஏழு வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு , கொல்லப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்குவது போல் தொங்கவிட்டு இருந்தனர் . இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் படாவுனில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த கொடூர சம்பவத்தை ஒத்து இருந்தது .
அந்த சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும் , கடைக்கு செல்லும் போது கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர் . அந்த சிறுமி காணாமல் போனதை அடுத்து கிராமம் எங்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த சிறுமியின் உடல் வேப்பை மரத்தில் தொங்குவதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர் .
அப்போது அங்கே இருந்த ஒரு மந்திரவாதியுடன் அந்த சிறுமியை பார்த்ததால் அவர் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கும் என கருதிய கிராம மக்கள் , அவரையும் அவரது இரண்டு நண்பர்களையும் அடித்து நொறுக்கினர் . அடித்த அடியில் ஒருவர் இறந்தார் . மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து போலிஸ் ஒருவர் கூறுகையில் , " கொல்லப்பட்ட அந்த நபருக்கும் இவரின் குடும்பத்திற்கும் பகை இருந்தது . அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் . மேலும் அந்த சிறுமி கொல்லப்படும் முன் கற்பழிக்கப்பட்டாளா என்பது ஆட்டோப்ஸி முடிவு வந்த பின்னரே தெரியும் "
என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.