கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான தென் ஆப்ரிக்காவின் காலிஸ் புதன்கிழமை தன்னுடைய ஓய்வை அறிவித்தார் . கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற காலிஸ் இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார் .
ஆனால் டி-20 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காகவும் , சிட்னி தண்டர் அணிக்காகவும் எப்போதும் போல விளையாடுவார் .
328 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள காலிஸ் தென் ஆப்ரிக்கா அணிக்காக 11,579 ரன்களையும் , 273 விக்கெட்களையும் எடுத்துள்ளார் . டெஸ்ட் போட்டிகளில் 166 போட்டிகளில் 13,000 த்துக்கும் மேற்பட்ட ரன்களையும் 294 விக்கெட்களையும் எடுத்துள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.