சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமி எம்.ஐ 3 சில நாட்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது . முதல் சுற்று விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலே அனைத்து விற்றுத் தீர்த்தது .
இரண்டாம் சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் வந்த 5 ஆம் நொடியிலேயே அனைத்து மொபைல்களும் தீர்ந்தது . இந்த மொபைலை பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே பெற முடியும் . முதலில் 2 நிமிடத்திற்குள் விற்றுத் தீர்க்கப்பட்டது என்று கூறினர் . இப்போது வெறும் 5 நொடியில் அனைத்து மொபைல்களும் தீர்ந்ததாக சியோமி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
போன சுற்றில் 10,000 த்துக்கும் குறைவான மொபைல்கள் தான் விற்பனைக்கு வந்தாலும் , ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டன . இந்த் சுற்றில் எத்தனை மொபைல்கள் விற்பனைக்கு வந்தன என்பது தெரியவில்லை .
மூன்றாம் சுற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.