மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு , சென்ற ஆண்டு பாரத் ரத்னா விருதை சச்சினுக்கு கொடுத்தனர் . இந்த முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு . இதற்கு முன் பாரத் ரத்னாவை ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்திற்கு கொடுக்க வேண்டும் என எடுத்து அதுவே கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது . ஆனால் கடைசி நேரத்தில் இந்த விருதில் சச்சின் பெயர் இணைக்கப்பட்டு , சச்சினே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் . இந்த உண்மை பிரதமர் அலுவலகத்தில் உள்ள இ-மெயில்களின் மூலம் வெளிவந்துள்ளது .
கடந்த வருடம் ஜூலை 16 ஆம் தேதி , அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களால் , பாரத் ரத்னா விருதிற்கு தியான் சந்த் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது . அதனை 9 நாட்கள் கழித்து அப்போதைய பிரதமரும் ஒப்புக் கொண்டார் . ஆகஸ்ட் மாதம் வரை தியான் சந்திற்கு தான் பாரத் ரத்னா என அந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர் .
மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானி சி.என்.ராவ் அவர்களின் பெயர் பிரதமரால் அக்டோபர் 24 ஆம் தேதி ஒப்புதல் செய்யப்பட்டது . இந்நிலையில் பிரதமர் அலுவலகம் , திடீரென விளையாட்டு அமைச்சகத்திடம் , சச்சினின் பயோ டேட்டாவை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டது . மேலும் அவசர அவசரமாக நடந்த நிகழ்வுகளால் சச்சினின் பெயருக்கும் சி.என் . ராவ் அவர்களின் பெயருக்கும் ஒரே நாளில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி வாங்கப்பட்டது . அனுமதி வழங்கப்பட்ட அந்த நாள் தான் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி நாளாகவும் இருந்தது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.