பாராளுமன்றம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வராமல் இருக்கும் பிரச்சனையை சமாளிக்க பிரதமர் புது யோசனை ஒன்றை கூறியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் வகையில் ஒரு குரூப் ஒன்றை உருவாக்க வேண்டும் . இந்த குரூப் மூலம் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற நேரம் குறித்து அறிவிக்கப்படும் . இந்த அறிவிக்கும் செயலை வெங்கையா நாயுடு அவர்கள் பார்த்துக் கொள்வார் .
மோடி அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து அவ்வளவு திருப்தி இல்லை . எனவே அனைத்து உறுப்பினர்களையும் நேர்மையாக இருக்கும் படியும் , வியாழக்கிழமை கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார் .
மேலும் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பேஸ்புக் புரோபைல் குறித்தும் கேட்டு அறிந்துள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.