இன்று லேப்டாப்பில் தான் நமது பாதி நேரங்கள் செலவிடப்படுகிறது . அதனால் பாதி பேருக்கு தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்படுகிறது . இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் லேப்டாப் பயன்பாட்டினை குறைக்க வேண்டும் . ஆனால் அது தான் பாதி பேருக்கு கஷ்டம் என்பதால் , இந்த கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம் .
நீங்கள் அமரும் நிலையை சரிபார்க்கவும் :
உங்கள் கண் எரிச்சல் அடைவதற்கும் , தலைவலி ஏற்படுவதற்கும் நீங்கள் உட்காரும் முறை தான் முக்கிய காரணமாக இருக்கலாம் . இதில் இருந்து விடுபட ஆன்லைனில் செக் செய்வதை விட உங்கள் அமரும் முறையை செக் செய்யுங்கள் . நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் கழுத்திற்கு அழுத்தம் கொடுக்கீறீர்களோ அதே அளவிற்கு உங்கள் கண்களிற்கு அழுத்தம் உண்டாகும் .
நீங்கள் சரியான் முறையில் அமர்ந்து உள்ளீர்களா என்று எளிதாக கண்டு பிடிக்கலாம் . உங்கள் கண் நிலையில் இருந்து உங்கள் லேப்டாப் மேலை அல்லது கீழே இருந்தால் உங்களின் முறை சரி இல்லை என்று அர்த்தம் .
20 - 20 - 20
இதை நீங்கள் ஒரு கணித சூத்திரம் போல மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம் . அதாவது நீங்கள் லேப்டாப்பில் பணிபுரியும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் , 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும் .
இதற்காக தனி ஒரு வெப்சைட்டும் உள்ளது :
http://www.protectyourvision.org/
நீல நிற விளக்கு
கண் எரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது அறையில் உள்ள நீல நிற ஒளி என்று ஒரு ஆய்வின் முடிவில் கூறுகின்றனர் . எனவே லேப்டாப்பை அதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் .சரியாக அட்ஜெஸ்ட் செய்து டிஸ்ப்ளேயில் உள்ள நீல நிற ஒளியை முடிந்த அளவு குறைத்து விடுங்கள் .
அல்லது இலவசமாக உள்ள இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்திடுங்கள்
https://justgetflux.com/
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.