இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியிடம் மோசமாக விளையாடி வரும் நிலையில் , இங்கிலாந்தில் உள்ள இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை புரிந்தது .
இந்த வெற்றியை முன்னாடி இருந்து வழி நடத்திச் சென்றவர் கேப்டன் மிதாலி ராஜ் . தன்னுடைய 50 ரன்களால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த அணியில் எட்டு பேர் தன்னுடைய முதல் போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த வெற்றி மூலம் ஆடவர் அணி நிகழ்த்தாத சாதனை ஒன்றை பெண்கள் அணி நிகழ்த்தியுள்ளனர் . இந்திய ஆடவர் அணி தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை இங்கிலாந்து மண்ணில் வென்றது இல்லை . ஆனால் பெண்கள் அணி 2006 ஆம் ஆண்டு தொடரை வென்ற பின்னர் , மீண்டும் இப்போது நடந்த தொடரை வென்று சாதனை படைத்துள்ளனர் .
இந்தியா : 114 &183/4
இங்கிலாந்து : 92 & 202
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.