பிரபக ரப் பாடகர் கேனி வெஸ்ட் . இவரது செல்ல மனைவி கிம் காதர்ஷியன் ( 33 ) .இருவருக்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் திருமணம் நடந்தது . பிரபல கிம் காதர்ஷியன் பற்றி அறிமுகம் தேவையில்லை . இவர் ரியாலிட்டி டிவி ஷோக்களில் வந்து பிரபலம் ஆனவர் .
கேனி வெஸ்ட் தனது மனைவியின் மீது கொண்ட காதலால் அவருக்கு தனியே கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார் . அந்த கோவிலை , கிம் மற்றும் அவரது குடும்பத்தினர் குடும்பத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம் .
பார்சிலோனாவில் உள்ள லா சக்ரடா கோவிலைப் போன்று இவர் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்துள்ளார் . இந்த கோவில் 1882 ஆம் ஆண்டில் இருந்து இன்னும் கட்டப்படாத நிலையில் தான் இருக்கிறது . கோவில் கட்டுவதற்காக அவர் 5 மில்லியன் டாலர் செலவு செய்ய தயாராக உள்ளார் . மேலும் இவர் ஆன்லைனில் ரசிகர்களிடம் நன்கொடை பெறவும் திட்டமிட்டுள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.