பாகிஸ்தானின் இரயில்வே இணையதளத்தை , இந்திய ஹேக்கர்கள் அடங்கிய ஹேக்கர் குழு ஹேக் செய்து அதன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது என பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . இந்த செயலுக்கு " பிளாக் டிராகன் ஹேக்கர் ஆன்லைன் ஸ்குவாட் " என்னும் குழுமம் பொறுப்பேற்றுள்ளது .
இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் , இணையதளத்தில் , " பாகிஸ்தானின் குடிமக்களே , உங்களது தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் உள்ள காஷ்மீரில் இத்தனை வருடங்களாக இரத்தமும் , அநீதியும் உங்களால் நடந்துள்ளது . இந்தியாவின் பல இணையதளங்கள் உங்கள் சகோதரர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது " என்று எழுதி இருந்தனர் . மேலும் ஒரு இந்தியக் கொடி ஒன்றை வைத்து இருந்தனர் .
மேலும் இது போன்று பல வெப்சைட்கள் ஹேக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விட்டு இருந்தனர் . இதே ஹேக்கர் குழு தான் பங்க்ளாதேஷின் தளத்தையும் இதற்கு முன்னர் ஹேக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.