இயற்கை உணவே சில நேரங்களில் நமக்கு மருந்தாக அமையும் . பாட்டி , தாத்தா நம்மக் கூட இருந்தால் எந்த எந்த நோயுக்கு மருந்தாக எந்த எந்த உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று நமக்கு கூறுவர் . ஆனால் , இப்போது உள்ளவர்களுக்கு பாட்டி , தாத்தா கிட்ட வந்தாலே பிடிப்பது இல்லை . அப்படிப் பட்டவர்கள் , இப்படி ஏங்கேயாவது படித்து தெரிந்து கொண்டால் தான் உண்டு .
இளநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் :
- இரத்த அழுத்தத்தை சரிபடுத்தும் : இளநீர் அருந்துவதால் , இரத்தம் சீராக உடம்பு முழுவதும் ஓடுகிறது . இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது . இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுவதால் , இதய நோய்கள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது .
- எடை குறைய உதவுகிறது : நீங்கள் எடை குறைய வேண்டும் என்று நினைத்தால் , உங்கள் உணவில் கண்டிப்பாக இளநீரை சேர்த்துக் கொள்ளுங்கள் .
- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : விட்டமீன்கள் மற்றும் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் , இளநீரில் வைரஸ் மற்றும் பாக்டரீகயாக்கள் எதிராக போராடும் தன்மை இருக்கிறது . இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது .
- கற்பமான பெண்மணிகளுக்கு : மருத்துவர்கள் அனைவரும் கற்பமானவர்களுக்கு இளநீரை பரிந்துரை செய்வார்கள் . ஏனென்றால் இளநீர் உணவு மெதுவாக செரிப்பதற்கு உதவும் , மலச்சீக்கல் ஏற்படாமல் தடுக்கும் . இதய எரிச்சலை கட்டுப்படுத்தும்
- கிட்னி செயல்பாட்டை அதிகரிக்கும் : கணிமங்களான பொட்டாஷியம் மற்றும் மேக்னிஷியம் அதிகமாக இருப்பதால் கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது நல்லதொரு மருந்தாக இருக்கும் .
- சருமத்திற்கு : உங்களுக்கு பருக்களினால் பிரச்சனைகள் இருந்தால் , இளநீரை உங்கள் முகத்தில் தடவி விட்டு ஒரு இரவு அப்படியே வைத்து இருங்கள் . சிறிது நாட்களில் நல்ல மாற்றம் ஏற்படும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.