இப்போது இந்திய மார்கெட்டில் பலருக்கும் வாங்குவதற்கு தவம் இருந்து கொண்டு இருக்கும் மொபைல் எதுவென்றால் அது சியோமி எம்.ஐ.3 ஆக தான் இருக்கும். இதே வசதிகளுடன் உள்ள மற்ற மொபைல்களின் விலை 20 ஆயிரத்திற்கு மேல். ஆனால் இதன் விலை 14 ஆயிரம் தான். அது தான் இந்த மொபைல் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம். விற்பனைக்கு வந்த சில நொடிகளில் இது தீர்ந்து விடுகிறது.
இதன் வெற்றியை தொடர்ந்து அந்த நிறுவனம் தனது அடுத்த மொபைலை இந்தியாவில் வெளியிட உள்ளது. இதன் பெயர் சியோமி ரெட்மி 1 எஸ் ஆகும். இதன் விலை ரூ.6999 ஆகும். இந்த மொபைலை சியோமி நிறுவனம் நாளை மறுநாள் அறிமுகம் செய்ய உள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.