இந்தியாவில் கிட்டத்தட்ட பலர் கையை தான் உணவு அருந்த பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் மேற்கத்திய முறை என்ற பெயரில் பலர் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்தி வருகின்றனர் . அது தான் நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர் . ஆனால் நம் முன்னோர்கள் கற்று தந்த முறையே நாம் மறப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கீழ் உள்ள பயன்கள் மூலம் நாம் அறியலாம் .
1 ) . உயிர் சக்திகளை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது :
ஆயுர்வேதத்தின் படி நமது உடம்பு ஐந்து உயிர் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் நமது கைகளில் உள்ள ஐந்து விரலும் ஐந்து பூதங்களை குறிக்கிறது . இந்த ஐந்து ஆற்றலில் ஒன்று சமநிலையில் இருந்து விலகினாலும் , நமது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் . நாம் கையினால் உணவு அருந்தும் போது , நமது அனைத்து விரல்களையும் நாம் உபயோகப்படுத்துவதால் , நமது உயிர் சக்திகள் அனைத்தும் ஆற்றல் அடைகிறது .
2 ) . செரிமானத்திற்கு உதவும் :
தொடுதல் உணர்வு என்பது நமது உடம்பில் மிக முக்கியமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற உணர்வுகளில் ஒன்றாகும் . நாம் கையினால் உணவு அருந்தும் போது அதில் தொடுதல் உணர்வு ஏற்படுவதால் , நமது வயிற்றை அது செரிமானத்திற்கு தயாராக இருக்கும் படி நமது மூலை செய்தி அனுப்புகிறது . இதனால் செரிமானம் நன்றாக நடக்கிறது .
3 ) சாப்பாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் :
கையினால் உணவு அருந்துவதன் மூலம் , நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற உணர்வு நமக்கு இருக்கும் . ஏதாவது கல் போன்றவை தட்டுப்பட்டாலும் நீக்கி விடலாம் . நமது கவனம் உணவில் இருக்க கையினால் சாப்பிடுவது தான் சிறந்தது .
4 ) உணவு சூடாக இருப்பதை அறிந்து கொள்ள :
நமது கை தான் சிறந்த வெப்பம் அறியும் கருவி . நமது கையை உணவு அருந்த பயன்படுத்துவதன் மூலம் சூடாக இருக்கும் உணவை நாம் ஆற வைத்து உண்ண உதவியாக இருக்கும் . சூடாக இருக்கும் உணவை தவிர்ப்பதன் மூலம் நமது நாவினை பாதுகாக்கலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.