இப்போது இணையத்தை கலக்கி வருவது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் தான் . ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேலஞ்ச் , இப்போது அனைவராலும் ஜாலியாக செய்யப்பட்டு வருகிறது . இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சால் இதுவரை ஏ.எல்.எஸ் நிறுவனத்திற்கு 1.9 மில்லியன் டாலர் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சின் வெற்றி பலரை பல நல்ல நோக்கத்திற்காக இது போன்ற சேலஞ்சுகளை தொடங்க வைத்துள்ளது .
அது போல இப்போது குழந்தைகளின் கேன்சர் நோய்க்காக புஷ் அப் சேலஞ்ச் என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . இந்த சேலஞ்சில் நாம் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் . நாம் நாமினேட் செய்தவர்கள் எத்தனை புஷ் அப் எடுத்தார்களோ அவ்வளவு டாலர் நாம் நாம் கொடுக்க வேண்டும் .
இதனை ஜேமி ஈசன் என்னும் பெண் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் தொடங்கி வைத்துள்ளார் . இது எந்த அளவுக்கு வெற்றி அடைகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.