அசாம் மாநிலம் சிராக் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை போலிசுக்கு தகவல் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் அவரின் பெற்றோர் முன்பு சுட்டுக் கொன்று , அந்த விடியோவை லோக்கல் சேனல்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்.டி.எப்.பி அமைப்பினர் .
அந்த விடியோவில் ஒருவர் , " அந்த சிறுமி போலிசுக்கு தகவல் கொடுப்பவராக செயல்பட்டதால் அவரை சுட்டுக் கொன்றோம் . இது மற்றவருக்கும் ஒரு பாடமாக அமையும் " என்று கூறினார் .
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் . அங்கே இருந்த மக்கள் , போலிசார் விடியோ வந்த பின்னர் தான் இது குறித்து விசாரிக்க வந்தனர் என்றார் . சம்பந்தப்பட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.