இன்றைய உலகில் பல காரணங்களுக்காக பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள். மார்க் ஜூக்கர்பெர்க் இதனை தொடங்குவதற்கு முக்கிய காரணம் இது செய்தித்தாளை போன்று மக்களுக்கு அனைத்து செய்திகளையும் தர வேண்டும் என்று தான். பின்பு அது நியூஸ் சேனல்களை விட வேகமாக செய்திகளை தந்து வருகிறது. அதன் பின்பு பேஸ்புக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பின்பு அது அதன் பயனாளர்களை அதிகம் பாதித்தது. நாம் லைக் செய்த பக்கத்தில் இருந்து வரும் போஸ்டுகளை மீண்டும் லைக் செய்தால் நமக்கு அந்த பக்கத்தில் இருந்து புதிய போஸ்டு வரும் என புதிய மாற்றம் சொல்கிறது.
பேஸ்புக் உபயோகப்படுத்துவர்களுக்கு பழைய செய்திகளை தந்து பேஸ்புக் நிறுவனம் ஏமாத்தி வருவதாக புதிய புகார் வந்துள்ளது. புதிய செய்திகளை அவர்களுக்கு உடனுக்குடன் தராமல் மறைத்து விடுகிறது. இதனை ஒருவரின் அக்கவுண்டை வைத்து நிருபித்துள்ளார்கள். டிம் என்பவரின் அக்கவுன்டை வைத்து பார்த்த போது , ஒரு நாள் முழுவதும் அவர் பேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு 1855 புதிய போஸ்டுகள் வரவில்லை. அவருக்கு மொத்தம் வந்தவை 1417 போஸ்டுகள் , அதில் 679 போஸ்டுகள் பழையவை.
எனவே பேஸ்புக் மீண்டும் இந்த மாற்றத்தை எடுத்து விட்டு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது பலரது கோரிக்கை ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.