அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹரி இன்று வெளியிட்ட 55 நிமிட நீள வீடியோவில் , இந்தியாவில் இஸ்லாமியை விதிகளை பரப்ப அல் கொய்தா அமைப்பின் கிளை ஒன்றை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .
இணையத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் , " எங்களது இந்த புதிய கிளை இந்திய துணைக் கண்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உதவும் . இதன் மூலம் ஜிஹாத் என்னும் கொடி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பறக்க விடப்படும் . மேலும் அசாம் , குஜராத் , பர்மா , வங்கதேசம் , அகமதாபாத் , காஷ்மீர் ஆகிய இடங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அநீதியில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் " என வீடியோவில் கூறினார் .
இந்த வீடியோவின் நம்பகத் தன்மை குறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில் அந்த வீடியோ உண்மை தான் என்பது தெரிய வந்துள்ளது . இதனால் அனைத்து மாநிலங்களிலும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.