BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 4 September 2014

எங்கள் தவறினை கண்டு பிடியுங்கள் , பரிசினை வெல்லுங்கள் !! டிவிட்டர் ஹேக்கர்களுக்கு அறிவித்துள்ள புதிய போட்டி ..



உலகம் எங்கிலும் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர் . டிவிட்டர் தனது சேவையின் பாதுகாப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளது . இதனால் உலகம் எங்கும் உள்ள ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது .

ஹேக்கர் ஒன் என்னும் போர்டலுடன் இணைந்து டிவிட்டர் இந்த போட்டியை தொடங்கியுள்ளது . டிவிட்டரில் உள்ள பாதுகாப்பு குறைகளை கண்டு பிடித்து கூறினால் ஹேக்கர்களுக்கு பணம் வழங்கப்படும் . குறைந்த பட்ச பரிசாக 8,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர் . அதிகப்பட்ச தொகை என்று எதுவும் அறிவிக்கவில்லை .

அவர்கள் கண்டுபிடித்து கூறும் குறைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் . இந்த பணம் குறைவாக இருந்தாலும் , ஒரு பெரிய தவறை சுட்டிக் காட்டினால் ஹேக்கர்கள் பண மழையில் நனையலாம் . இதேப் போன்ற போட்டிகளை இதற்கு முன்னால் பேஸ்புக் மற்றும் கூகுள் அறிவித்து இருந்தது . அதன் மூலம் அவர்கள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொண்டனர் .

கடந்த வருடம் பேஸ்புக் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இது போன்ற பாதுகாப்பு பிரச்சனையை சுட்டிக் காண்பித்ததற்கு 8 லட்ச ரூபாய் பரிசாக வழங்கியது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media