முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம் கேரளாவின் அடுத்த ஆளுநராக நேற்று நியமிக்கப்பட்டார் . இதற்கு முன்னால் கேரளாவின் ஆளுநராக இருந்த ஷிலா தீட்சித் பதவியை ராஜினாமா செய்ததால் சதாசிவம் அவர்கள் நியமிக்கப்பட்டார் .
வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி கேரளாவின் தலைமை நீதிபதி தலைமையில் அவர் பொறுப்பேற்று உறுதிமொழி அளிக்க உள்ளார் . இது குறித்து சதாசிவம் கூறுகையில் , " நான் கேரள மக்களுக்காக பணியாற்ற உள்ளேன் . அவர்களின் நலனுக்காக உழைப்பேன் " என்றார் .
இப்போதுள்ள மோடி அரசில் , எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும் இல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பது இதுவே முதல் முறை . மேலும் தலைமை நீதிபதி ஆக இருந்த ஒருவரை அந்த பணியை விட குறைவான மதிப்பு உள்ள பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.