நவீன மயமாக்கலில் அழிந்து வரும்
உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்றுசிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில்
சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.
அழியும் குருவிகள்.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்
நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும்
சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம்
ஆகும் பாரதியார் தனது
கவிதைகளில் சிட்டுக் குரு பெருமைகளை பாட மறக்கவில்லை.
காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்
அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள்.
சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும்
அழகே அழகு!.
அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு
குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது. அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான் . எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில்
பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை
தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும் .
தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங் குருவி, கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி மைனா அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு
ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும். வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து
பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான
பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில்
அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.
சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து
போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும். அரி காடை அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர் கவுதாரி, கானாங் கோழி போன்ற
பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடும் தூரத்தில் இருந்துக்
கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று
அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.
மொபைல்போன்களால்ஆபத்து.
களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை
ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும்
கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம்
அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள். மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை
சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின்
கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.
குருவிகளை காக்கும்வழி.
1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை
அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும்
குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து
குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில்
தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன
நிலை வேண்டும்.
'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின்
கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.