பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை
பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது
தொடுக்கப்பட்ட வழக்கில், அவர் தேசத்துரோகக் குற்றம் இழைத்திருப்பதாக
அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ) நீதிமன்றத்தில்
வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஃபைஸல் அரப் தலைமையிலான அமர்விடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரி காலித் குரேஷி கூறுகையில், ""பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை தாற்காலிகமாக முடக்கி வைப்பதற்கான உத்தரவை, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி முஷாரஃப் வெளியிட்டுள்ளார்.
எனவே, அவர் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது'' என்று கூறினார்.
பாகிஸ்தானில் ஏற்கெனவே பல வழக்குகளைச் சந்தித்து வரும் முஷாரஃபுக்கு இது பலத்த பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.