இன்று மாலை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், தாம்பரம்- கடற்கரை இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இன்று காலை பல்லாவரம் அருகிலும் ஒரு மின்சார ரெயிலில் தீப்பிடித்தது. ஒரே நாளில் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.