இன்று காலை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென தீப்பொறி ஏற்பட்டது. பிறகு, ரயில் டிரைவர் பகுதயில் இருந்து பயங்கர சத்தத்துடன் தீ ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டதை அடுத்து, பயணிகள் அலறி அடித்து கொண்டு பெட்டியில் இருந்து வெளியேறினார்கள்.
தொழில்நுட்ப துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்கள் விரைந்து வந்தனர். மின்சாரத்தை சப்ளை செய்யக்கூடிய 'ராடு' உடைந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அதனை சரி செய்து ரயிலை இயக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனாலும் ரயில் இயங்கவில்லை. பின்னர், தாம்பரத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதான என்ஜினை இழுத்து சென்றது.
இந்த சம்பவத்தால் கடற்கரை–தாம்பரம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.