வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் இந்திய ரூபாய் எவ்வளவு கொண்டு வருகிறார்கள் என குறிப்பிட வேண்டும் என முதல்முறையாக சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு வருபவர்கள், அதுபற்றி இந்திய சுங்க அறிவிப்பு விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். படிவத்தில் தவறான தகவல் தந்து வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு உண்மையாக செலுத்த வேண்டிய சுங்க வரியில் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடு செல்லும்போதுதான் இந்த படிவத்தை நிரப்ப வேண்டும். திரும்பி வரும்போது படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.