பாஜக கூட்டணி - பாமக உள்ளே, தேமுதிக வெளியே? விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போன் சுவிட்ச் ஆஃப்!
நேற்று இரவே பாஜக வுடனான கூட்டணியில் பாமக இணைவது குறித்து முடிவு எட்டப்பட்டது, சேலம் மற்றும் திருவண்ணாமலை தொகுதிகள் குறித்து தொடர்ந்து பாமக பாஜக இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்தது, இந்த இரு தொகுதிகளின் பேச்சுவார்த்தை முடிவு எப்படி இருந்தாலும் கூட்டணி உறுதி என்று பாஜகவும் பாமகவும் முடிவு செய்துள்ளன.
சில தொகுதிகள் ஒதுக்குவது மட்டுமே முடிவு செய்ய உள்ளதால் நேற்று இரவே செய்தியாளர்களை அழைத்து முதலில் கூட்டணியை அறிவித்துவிடலாம் என்றும் மீதமுள்ள சில தொகுதிகள் குறித்து தொடர்ந்து பேசலாம் என்று பாஜக முடிவு செய்து தேமுதிகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திய விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது, விஜயகாந்த் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார், கூட்டணி பேசியவரின் போனோ சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளதால் கடுப்பாகியுள்ளது பாஜக தலைமை.
பாமக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு கூட்டணி பேசுவதால் அவர்கள் கேட்கும் தொகுதியை தரவேண்டும் என கேட்டால் நாங்களும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு கூட்டணி பேசுவோம் என்று தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் தேமுதிக தரப்பில் கூறப்பட்டது, அதையடுத்து கூட்டணி குறித்து முடிவாகாமல் தன்னிச்சையாக விஜயகாந்த் வேட்பாளர்களை அறிவித்தும் உள்ளார்.
நேற்றே கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பு வெளியிட மேலிட பாஜக முடிவு செய்திருந்த நிலையில் தேமுதிகவின் போக்கால் அதிருப்தி அடைந்த மேலிட பாஜக தேமுதிக முரண்டு பிடித்தால் கழற்றிவிட சொல்லியுள்ளதாக பாஜக வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது, இது விஜயகாந்தை வழிக்கு கொண்டு வரும் டெக்னிக் என்றும் கருதுகிறார்கள்.
நேற்று மாலைவரை தேமுதிக உள்ளே பாமக வெளியே என்ற நிலை மாறி தற்போது பாமக உள்ளே, தேமுதிக வெளியே என்ற நிலை உள்ளது.
# தேர்தல் முடிவுகளை விட இவங்க கூட்டணி முடிவு செய்வதே திரில்லிங்காக இருக்கே!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.