பாமகவும் பாஜக கூட்டணியில் இணைந்தது. சிறிது நேரத்தில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
மணிக்கு மணி மாறிய காட்சிகள், தமிழகத்தில் வலுவாகிறது மூன்றாம் அணி.
பாஜக கூட்டணியில் பாமகவும் இணைவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின் கூட்டணியில் இணைவதாக பாமக முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் ஒரே தொகுதிகளை தொடர்ந்து கேட்டு அதில் பிடிவாதமாக இருந்ததால் கூட்டணியில் இணைவது குறித்து முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இரண்டு நாட்களுக்கு முன் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது என்று அறிக்கைவெளியிட டாக்டர் ராமதாஸ் தயாராகிவிட்ட நிலையில், அவரை அன்புமணி சமாதானப்படுத்தி தொடர்ந்து பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்திவந்த நிலையில் இரண்டு மணி நேரம் முன்பு கூட்டணி முடிவடையாமல் தனித்து போட்டியிடலாம் என்ற நிலைக்கு பாமக சென்றது. தற்போது மீண்டும் பேசிக்கொண்டுள்ளார்கள், பாஜக கூட்டணியில் பாமக இருப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் பாஜகவும் பாமகவும் விரும்பும் ஒரு தொகுதிக்கான பேச்சுவார்த்தை மட்டும் தற்போது நடந்து வருகின்றது.
பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி உருவாகும் நிலையில் வட தமிழகத்தின் பல தொகுதிகளிலும், கோயம்புத்தூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, நாகர்கோவில், திருச்சி போன்ற தொகுதிகளிலும் மும்முனைப்போட்டி வலுவாகியுள்ளது.
# பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி முடிவானால் அது அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்று நினைத்தால் லைக் போடவும்.
# இந்த கூட்டணியால் திமுக, அதிமுகவுடன் வலுவான போட்டியை ஏற்படுத்த முடியாது என்று கருதினால் கமெண்ட்டில் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.